தமிழ் விளம்பர சூழல்

பஜாஜ் விளம்பரத்தை பார்த்ததும் , தமிழ் விளம்பர சூழல் பற்றி சில எண்ணங்கள் தோன்றின. மிகுதி  விளம்பரங்கள் இறக்குமதி தான் என்றாலும் அதில் டப் செய்யப்படுபவை பற்றி தான் என் எரிச்சல்.

பார்லே ஸ்மார்ட் சிப்ஸ் விளம்பரம் முடியும் தருவாயில்  “Look for aamir on the pack”  என்று பிண்ணணி ஒலிக்கும்  வாசகம் ஹிந்தியில் தந்த பஞ்ச், தமிழில் இல்லை.  இன்னொரு உதாரணம் லேஸ் விளம்பரம். ‘Dillogical’ என்பதை இதயம் லாஜிகல் என்று மொழிபெயர்த்தால் அபஸ்வரமாய் ஒலிக்கிறது.

தமிழுக்கு டப்செய்யும் போது நம்மூர் கலாச்சாரத்திற்கு ஏற்றார் போல் மாற்ற வேண்டும் என்ன எண்ணம் இல்லாமல் மொழிபெயர்ப்பு வேலையில் தான் கிரியேடிவிட்டி இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

ஹார்லிக்ஸ், கோல்டு வின்னர் போன்றவை தமிழில் உருவாகி ஹிந்திக்கு போனதற்கு காரணம், தயாரிப்பு நிறுவனம் நடத்திய சர்வே தமிழ்நாட்டுக்கு சாதகமாய் அமைதிருக்கலாம். இங்குள்ள தாய்மார்கள் குழந்தைகளின் நலனுக்கு எவ்வளவு விலையும் கொடுப்பார்கள் என்பதாய் வெளிபட்டிருக்கலாம்.

இன்னொரு வகை விளம்பரங்கள், முற்றிலும் வேறு. வட இந்தியர்களை மாடல்களை வைத்து உருவாக்கப்படுவை.  செளத் இன்டியன் ஸ்டிரியோ டைப்பை இறுக பிடித்து நிறுத்தும் உதாரணங்கள்.

கதம்பம் தறித்த பெண்கள், கறுப்பு சாயம் பூசிய ஆண்கள், ஆசை என்பதை ‘asai’ என்று எழுதிபடிக்கும் transliterate கூட்டம், வாயசைவுகள் மட்டும் நகர்த்தியே காட்டப்படும் கோஸப் காட்சிகள். இவ்வகை விளம்பரங்கள், ஒரு சாரார்ரய் கிஞ்சித்தும் மதிக்காத கூட்டம் , அதுவும் விளம்பர உலகம் பல்கி பெருகி30 ஆண்டுகள் கழித்தும்.

Advertisements
This entry was posted in பினாத்தல், பொது and tagged , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s