The Power of Habbit

The Power of Habbit புத்தகத்தை வாசித்து கொண்டிருக்கிறேன் சாரி கேட்டுக்கொண்டுருக்கிறேன். அதிலிருந்து சில மணித்துளிகள்

நமக்கு பழக்கங்கள் எதனால் ஏற்படுகிறது? உருவாகும் காரணி எது? எப்படி கெட்ட பழக்கத்தை விட்டு நல்ல பழக்கத்தை உருவாக்கி கொள்ள முடியும். எப்படி நிறுவனங்களும் , மனிதர்களும் பழக்கம் என்றகிற வஸ்துவால் மாற்றங்களை கொண்டு வந்தார்கள். இது தான் இப்புத்தகத்தின் சாரம்.

ஒரு நல்ல பழக்கம் உருவானால் , கூடவே இன்னும் கூடி அய்ந்தாறு பழக்கமும் சேர்ந்து கொள்ளுமாம்.

நீங்கள் உடல்பயிற்சி மேற்கொள்கிறீர்கள் என்றால், உணவு உட்கொள்ளுவதும் சீராகும். சோம்பல் தவிர்ப்பீர்கள். அலுவல்கள் விரைந்து முடிப்பீர்கள்.வெறும் செல்ப் ஹெல்ப் புத்தகம் போல் இல்லாமல் உண்மை சம்பவங்களை , நிஜ மனிதர்கள் வைத்து கோர்க்கப்பட்டுள்ளது.

டார்கெட் ,அல்கோ போன்ற நிறுவனங்களில் நடந்த crisis,அதன் விளைவாக புகுத்தப்பட்ட மாற்றங்கள் எப்படி கம்பெனியை புரட்டி போட்டது , தோல்வியை மட்டு சந்தித்து வந்த Buccaneers அணி எப்படி பலே ஆப்ஸ் வரை சென்று தோற்று ,பின்னர் சாம்பியன்ஸ் பட்டம் வென்றது, ஃ ரோட் ஐலேண்ட் ஹாஸ்பிடலில் தவறான சர்ஜெரியால் , உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை எல்லாமே விவரமாக தொகுத்திருக்கிறார்

வில் பவர் என்பது தொற்றிக்கொள்ளும் பழக்கமே,அது பிறவி குணமல்ல என்பதை அழகாக நிறுவியுள்ளார்

உங்கள் பழக்கத்தை மாற்றவோ அல்லது ஒரு நல்ல புத்தகம் வாசித்த உணர்வை கண்டிப்பாய் இவ்வாசிப்பு தரும்

Advertisements
Posted in புத்தகம், பொது | பின்னூட்டமொன்றை இடுக

சாதாரண கிழமை

ஞாயிற்று கிழமை ஒரு மாஸ் வாக் இன்.  மூன்று வருட அனுபவம் கொண்ட சாப்ட்வார் இஞ்சினியர்கள்,  விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து இருந்தோம்.

மொத்தம் எழுபது பேர் வந்திருந்தனர். நானும் இன்னொருவரும் ஆளுக்கு பாதி என்று பிரித்துக்கொண்டு இண்டர்வியு செய்தோம்.

முதல் பாதியில் ஒவ்வொருவருக்கும் இருபது முதல் இருபத்திஐந்து நிமிடம்  என்று செலவிட்டு பில்டர் செய்து வந்தேன்.

நேரம் ஆக ஆக , இந்த வேகம் ஆகாது என்று ஹெச்.ஆர் எச்சரித்தார். சரி என்று பதினைத்து நிமிடமாக குறைத்துக்கொண்டேன்.

பன்னிரண்டு முப்பதுக்கு மணியடித்தது. சரி ஒரு ஃபர்கர் மென்று விட்டு வரலாம் என்று, ஹெச்.ஆரிடம் பத்து நிமிட அவகாசம் கேட்டேன்.

பர்கர்க்கும் வழியில்லை, ரோட்டிக்கும் வழியில்லை. எனவே இந்திய தேசிய உணவான இத்தாலி ரொட்டி ரெண்டு உள்ளே தள்ளி விட்டு வர அறுபது நிமிடமாயிற்று.

வந்த ஆட்களில் ஒருவர் மிகவும் குறிப்பிட தகுந்தவர்.ஆனால் சாதரணர். உங்களை பற்றி சொல்லுங்கள் என்று கேட்ட போது , நறுக்கு தெரித்தார் போல் விவரித்தார்.

சிறிய புன்முறவலுடன்,எலிமிநேட்டர் கேள்விகளை கேட்டேன். சரியாக பதில் சொல்லி கொண்டு வந்தவர், திடீரென்று நிறுத்தி , ” எனக்கு திக்கு வாய்” என்றார்.

அவர் சொல்லும் வரை யூகிக்க முடியவில்லை. ஏதோ பதட்டத்தில் அப்படி பேச்சு மாறி போனது என்று நினைத்திருந்தேன்.

“can i know the feedback?”.

“You can leave for the day”.

……

“ஏதோ ஞாபகத்தில் , அந்த நபர் போய் விட்டாரா?”,  என்று வினவினேன்.

ஆமாம் என்று பதில் வந்தது. அவருடைய ரேஸுமேவை  வாங்கிக்கொண்டு,  இன்னும் பரசீலிக்க அவகாசம் கேட்டேன்.

பத்து நிமிட இடைவெளியில் , இரண்டு நபர்களை இண்டர்வியு செய்து விட்டேன். கணக்கு நாப்பதை எட்டியது .

இனி மழை பெய்யாது என்று உறுதிசெய்து கொண்டு,   செலக்ட் செய்யாத கேண்டிடேட்ஸ்  லிஸ்டை  கொடுத்தேன். அதில் அந்த நபரின் பெயரும் இருந்தது

Posted in General | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

The Churchill’s Secret War – My Review

இரண்டாம் உலகப்போரின் போது நடந்த (அ) நடத்தப்பட்ட பெங்கால் பஞ்சத்தில் , மனிதனை உண்ணும் கொடுரம் ஒன்றும் கூட நடை பெறவில்லையாம்.கூட்டு கொள்ளை தான் வழி என்றான பிறகு, உடல் வலிமை இன்றி விட்ட அரையில் செத்த கதைகள் நிறைய விரவி கிடக்கின்றன.

புயல், பஞ்சம், அதன் காரணமாக நீர்த்து போன வெள்ளையனே வெளியேறு இயக்கம் ,எல்லாம் அடுத்தடுத்து நிகழ்ந்த துர்சோகங்கள்.சோனா காச்சி , கம்முனிசம், பிரிவினைவாதம் வேரூன்றுவதற்கு செயற்கை பஞ்சம் காரணமாய் இருக்கக்கூடும் என்ற ஆழ்ந்த குழப்பத்தை நம்மனதில் விதைக்க தவறவில்லை இப்புத்தகம்.

ஹிட்லரை சந்தித்து பேசிய போஸ் , இங்கிலாந்து இந்தியாவை விட்டோட , தம்முடன் சேருமாறு அழைத்திருக்கிறார். அவர் மறுத்து விட ஜப்பான் சென்று அவர்களின் ஒத்துழைப்பில் , பிரிட்ஷ்ஷாரை விரட்ட திட்டம் தீட்டியிருக்கிறார்.பஞ்சம் உருவாகும் நிலையில் எச்சரித்தும், சர்ச்சில் உட்பட எவரும் செவி சாயக்கவில்லை.

அறிக்கை மேல் அறிக்கை அனுப்பியும் , சர்ச்சில் உலகப்போரில் குறியாய் இருந்தார். போர் முடியும் பட்சத்தில் , தன் நாட்டு மக்கள் உணவு இறக்குமதியால் பாதிக்கப்பட கூடாது என்பதில்  தான் , அவர் கவனம் இருந்திருக்கிறது.ஒவ்வொரு அடுக்கிலும் , ஒவ்வொரு சால்ஜாப்பு சொல்லப்பட்டு ,பஞ்சம் பல் மடங்காக பெருக்கெடுக்க உந்துதலாக அமைந்த சோகம் பெரிய அவலம்.

 • முதல் காரணம், இந்தியா உணவு உற்பத்தியில் கவனம் செலுத்த தவறி விட்டது
 • இரண்டாவது காரணம், உணவு பதுக்கல் , பஞ்சம் என்னும் வதந்தி பரவ காரணமாக அமைந்து விட்டது
 • மூன்றாவது காரணம், போரின் போது பஞ்சத்தை அழிக்க முறிபட்டால் ,பெங்கால் சிப்பாய்கள் கலகம் செய்ய கூடும்.
 • நான்காவது காரணம்,இன்னும் சில ஆண்டுகள் கழித்து சுய அந்தஸ்து வழங்கப்பட்டு, நிர்கதியாய் விடப்பட வேண்டிய நாட்டை காப்பாற்ற எந்த முகாந்திரமும் இல்லை.
 • ஐந்தாவது காரணம், 1857 சிப்பாய் கலகம் போல் இன்னொன்றை பிரிட்ஷ்ஷார் சந்திக்க விரும்ப வில்லை.

ஐரோப்பில் போர் முடிந்த நிலையில் அமெரிக்கா காலனி நாடுகளை ஐ.நா சபையின் கீழ் கொண்டுவர ரூஸ்வோல்ட்தீர்மானம்போட , சர்ச்சில இந்தியாவை விட்டுத்தர முடியாது என்று  மறுத்து விட்டார்.  அதே சமயம் இந்தியாவுக்கு விடுதலை தரவும் மறுத்து விட்டார்.

1946இல் மறு தேர்தலை சந்தித்த சர்ச்சில் , எப்படியும் வென்று விடுவார் என்று நினைத்தார். அதற்கான காய்களை நகர்த்த ஆரம்பித்தார். பஞ்சம் பற்றிய செய்திகள் பிரித்தானிய மக்களை எப்படியோ எட்டியது.மக்களின் ஆதரவு நிலையை எடுக்க , இந்தியாவிற்கு விடுதலை தர முடிவெடுத்தார்.

இருந்தாலும் காலனியாதிக்கம், மக்கள எப்படி காப்பற்றியது என்று காட்டவும் , நாம் இல்லாவிட்டால் ஹிந்துவும் முஸ்லிமும் எப்படியெல்லாம் சண்டை போட்டு கொண்டிருப்பார்கள், தீண்டத்தகாதவர்களை ஒடுக்கியே வைத்திருப்பர்க்கள் என்றும் நிலை நாட்ட விரும்பினார்.

அதனால் , மத துவேஷத்தை தூண்டி , கலவரம் உருவாயிற்று. சுதந்திரத்திற்கு போராட வேண்டியவர்கள் , சண்டையிட்டு கொண்டனர். இருந்தாலும்  பிரித்தானிய மக்கள் போர் கால பிரதமர் , சமாதான கால ஆட்சிக்கு தேவை இல்லை  என்று நிராகரித்தனர்.மத கலவரங்கள் தடுக்க முடியாமலும், ஜின்னாவையும் காந்தியையும் ஒருமித்த கருத்துக்கு வர விடாமலும்  , காய் நகர்த்தி நாட்டை துண்டாட நினைத்த பிரிட்டிஷாரின் நிறைவேறியது.

போர் காலத்தில் நடந்த விசாரணைகள் , தகவல் பரிவர்த்தனைகள்  மெல்ல மெல்ல பொது தளத்திற்கு வெளி வந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆவணம் 2016இல் வெளியாக இருக்கிறது. அதில் என்னென்ன சர்ச்சைகள் உருவாகுமோ?

Posted in புத்தகம், பொது | Tagged , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பறவை

ஒரு கூட்டமுண்டு
எந்த கவலையுமின்றி
நாளை பற்றிய பிரக்ஞசைஇன்றி
திரியும் அது
இலக்குமில்லை
பிணக்கமில்லை

Posted in கவிதை | பின்னூட்டமொன்றை இடுக

படிக்க ஒரு பட்டியல்

18வது அட்சக்கோடு  – அசோகமித்ரன்
மானசரோவர் – அசோகமித்ரன்
சிதம்பர நினைவுகள் – ஷைலஜா
நெஞ்சில் ஒரு சுடர் – கமலா ராமாசாமி : காலச்சுவடு பதிப்பகம்
ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி : காலச்சுவடு பதிப்பகம்
சி.ஐ.டி சந்துரு -தேவன்

ஈழம் : சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள் – பிரான்சிஸ் ஹாரிசன் : காலச்சுவடு பதிப்பகம்

Posted in புத்தகம் | பின்னூட்டமொன்றை இடுக

மதிய சாப்பாடு

மதிய சாப்பாடு எப்படி இருந்துச்சுன்னு கேள்வி வந்தா என்ன சொல்லாம்ன்னு மனசுக்குள் யோசித்தேன்.

பதில் 1 : சாப்பாடு , கொண்ட கடலை குர்மா சூப்பர் , தயிர் சாதம் பத்தல

பதில் 2 : எதுக்கும்மா கஷ்ட படுற, பசங்கள ஸ்கூல்லுக்கு அனுப்பிட்டு இது வேறையா?

பதில் 3: இந்த லஞ்சு பாக்ஸ் வேணாம் ,என்னால மைக்ரோ ஓவன்ல சூடு பண்ண முடியல

சூவை கழட்டி வைத்து விட்டு , லஞ்ச் பாக்ஸ் கிச்சன் சிங்கில் வைக்கும் போது அந்த கேள்விய எதிர் கொள்ளாமென்றிந்தேன்.

ஒரு மௌன பார்வை முகத்தில் வீசவே, “இட் வாஸ் குட்”

“சாப்ட்டு முடிச்சுவுடனேயே , ஒரு போன் பண்ணி சொல்லியிருக்கலாமே””

Posted in அனுபவம், பினாத்தல், பொது | பின்னூட்டமொன்றை இடுக

சமீபத்தில் படித்த புத்தகங்கள்

 • திமுக உருவானது ஏன்  – மலர்மன்னன்
 • திராவிட இயக்கம்: புனைவும் உண்மையும்  – மலர்மன்னன்
 • அமெரிக்க உளவாளிஅ.முத்துலிங்கம்
 • சின்மயி  விவகாரம் – விமலாதித்த மாமல்லன்
 • நான் நாகேஷ் – எஸ்.சந்திரமௌலி
 • உண்மை கலந்த நாட்குறிப்புகள் – அ.முத்துலிங்கம்
 • மூங்கில் மூச்சு – சுகா
 • தாயார் சன்னதி – சுகா
 • இது ராஐபாட்டை அல்ல – சிவக்குமார்
Posted in புத்தகம் | பின்னூட்டமொன்றை இடுக