Exigency
Exigency can be defined as a degree of urgency decring the code of normalcy under extreme stressful conditions to extrigate the need for completion of given task and expected task with the sole aim of pleasing one’s superior.
Exigency can be defined as a degree of urgency decring the code of normalcy under extreme stressful conditions to extrigate the need for completion of given task and expected task with the sole aim of pleasing one’s superior.
சட்ட சிக்கல் காரணமாக ஆங்கில பதிவில் இடவேண்டியதை இங்கே இடுகிறேன். ஊரில் ஒரு ஆடு மேய்பவன் இருந்தானாம். மந்தைகளுக்கு வேலை தருவதும், பின்னர் அந்த வேலை முடிந்ததா என்று கவனிப்பதும் தன் வேலை என்று இருந்தானாம். இந்த புல்லில் நிறமில்லை, இந்த புல்லில் சுவையில்லை , இந்த புல்லில் திடமில்லை என்ற புகார் கூறும் ஆடுகள் முதலில் வெட்டப்பட்டன அல்லது மிரட்டப்பட்டன. புகார் கூறாத ஆடுகள், புல்லில் குறை கண்டாலும் , மெளனித்தன, பட்டினியால் தவிக்கவும் செய்தன.
நீ ஏய்த்தால் அவனை ஏய்க்க இன்னொருவன் இருப்பான் என்பது பிரபஞ்ச கூட்டல் கழித்தல் கணக்கு. இருப்பாள் என்று திருத்தி கொள்ளுங்கள். மேய்ப்பது சரியோ தவறோ, நீ வீடு திரும்பு, ஏழு தாண்டினால் சோறு கிடையாது. இதற்கு பயந்தே ஏழுக்கு தயாராகி விடுவான் ஏழரை. காலையில் சீக்கிரம் வருவான் என்றால் இல்லை. ஆனால் ஆடுகளை மட்டும் பத்து மணிக்கு வரச்சொல்லி விடுவான் அல்லது வரவழைத்து விடுவான். ஆடுகளின் அதிர்ஷ்டம் பெற்றவை என்று நீங்கள் நினைத்தால் தவறு. ஆடுகளை மோப்பம் பிடிக்கும் பிரத்தேயக சக்தி இந்த இயேசுவிடம் உண்டு.
புல்லில் குறையிருந்தால் என்னிடம் சொல், ஆனால் குறை தீர்ப்பேன் என்று வராதே. கருப்பா சிவப்பா என்று வாதிடுவது என் வேலையில்லை, அது கருப்பென்றால் ஒத்துக்கொள் சிவப்பென்றால் ஒத்துக்கொள், தட்பவெட்ப நிலையை கருத்தில் கொண்டு. புல் புடுங்குவது உன் வேலை இல்லை, புடுங்கி திண்பது மட்டுமே .
அவனால் புடுங்க முடிந்தது உன்னால் முடியவில்லையே, சிண்டும் முடிப்பான் மேய்ப்பாளன்.
தொடரும்…