தொகுப்பு

Posts Tagged ‘imdb’

IMDBயும் நானும்

அக்டோபர் 21, 2009 மறுமொழியவும்

IMDB டாப் லிஸ்டில் உள்ள பத்து படங்களையாவது பார்த்து விட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் , ‘one flew over cuckoo’s nest’  ட்வுன்லோட் செய்தேன். நிறைய ஹைப்பிற்கு காரணம் , பதிவர்களிடத்தில் பேசப்படும் ஒரு படமாக இருந்ததே.  ஸப்டைட்டிலுடன் பார்ப்பது தன்னை குறைவாக மதிப்பிடுவதற்கில்லை, மாறாக ஒரு சரியான புரிதல் வேண்டியே.

ஜாக் நிக்கல்ஸன் நாயகனாக நடித்து பெரும் பேரும், விருதும் வாங்கிய படம் என்பதாலேயே எதிர்ப்பார்ப்பு கூடி விட்டது, அது நிறைவேறாததால் படத்துடன் ஒன்ற முடியவில்லை. ‘ the shawshank redemption’ அவ்வாறல்ல. ஏதேச்சையாக தட்டுபட்ட படம். விமர்சனம் எதுவும் படிக்கவில்லை, இருந்தாலும் நிறையவே ரசித்தேன். அந்தப்படம் ஏன் நெம்பர் 1. இடத்தை தக்கவைத்திருப்பது ஏன் என்ற காரணமும் புரிந்தது.

nurse ratched ஒரு கொடுங்கோலியாக சித்தரித்த பதிவுகளின் பிம்பம்,  தவறென தெரிந்ததும் படத்தின் சுவாரஸ்யம் போய் விடுகிறது. மெக்மர்பி பேஸ்பால் பார்க்க வேட்டெடுக்கும் போது, அவர் வேண்டுமென்றே, rebel செய்வதாக பட்டது. ஜெயில் தண்டனையில் இருந்து தப்பிக்க நினைக்கும் இவனுக்கு சக நோயாளிகளுக்கு உதவும் மேம்பட்ட எண்ணம் இருப்பது நம்பும் படியாக இல்லை.  அவனை தலையணை பொத்தி மூச்சிரைக்க வைக்கும் போதும் , பரிதாபம் ஏற்படாமல் போகிறது.

இயக்குநரின் நோக்கம், பைத்தியக்கார மருத்துவமனைகளை பற்றியதா, அல்லது சில விமர்சனங்களின் பார்வையில் எழுப்படும் எழுபதுகளின் கோபக்கார அமேரிக்க வாலிபனை பற்றியதா, அல்லது டிராஜடி படம் காமெடியாகி போனதா தெரியவில்லை.

Follow

Get every new post delivered to your Inbox.