தொகுப்பு

Posts Tagged ‘வித்யாசாகர்’

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில்

செப்டம்பர் 29, 2009 மறுமொழியவும்

நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் -அன்று
நான் வழி  அறிந்தேன் உன் பாதையில்
நான் எனை அறிந்தேன் உன் அருகிலே
நான் திசை அறிந்தேன் உன் விழியிலே – இன்று
நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே (நான் மொழி)

நல்லதொரு பூவாசம் நானறிந்த வேளையில்
நந்தவனம் போன இடம் நானறியேன்
என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில்
வெண்ணிலவு போன இடம் நானறியேன்

காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே
ஊற்றை போல பேசியவள் ஊமையாகி போனதெங்கே

வாழ்வை மீட்டு கொடுத்தவளே
நீயும் தொலைந்து போனதெங்கே (நான் மொழி)

கண்ணிமையில் ஓர் ஆசை ஊஞ்சல் இடும் வேளையில்
உண்மைகளை உள் மனது காண்பதில்லை
புன்னகையில் நான் தூங்க ஆசைபட்ட வேளையில்
உன் மடியில் தூங்கும் நிலை நியாமில்லை

மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை
காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை
வாழப்போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதுமில்லை (நான் மொழி)

படம் :   கண்டேன் காதலை
இசை :  வித்யாசாகர்
பாடியவர் : சுரேஷ் வாட்கர்

மழை நின்ற பின்பும்

பெப்ரவரி 6, 2009 மறுமொழியவும்

மழை நின்ற பின்பும் தூரல் போல
உன்னை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல
உன்னை பிரிந்த பின்பும் காதல்

எனக்கும் காதல் பிறந்திருக்கே
அதற்கு பேரும் வைக்கட்டுமா
எனக்குள் இதயம் தனித்திருக்கே
அதை உன்னுடன் சேர்க்கட்டுமா (மழை நின்ற)

நீர்த்துளிகள் நிலம் விழுந்தால்
பூக்கள் மெல்ல தலை அசைக்கும்
என் மனதில் நீ நுழைந்தால்
மௌனம் கூட இசையமைக்கும்

பூங்குயில்கள் மறைந்திருந்தால்
கூவும் ஓசை மறைவதில்லை
தாமரையாய் நானிருந்தும்
தாகமினும் அடங்கவில்லை

பாதம் இரண்டு நடக்கும்
இந்த பயணத்தில் என்ன நடக்கும்
வானம் இருக்கும் வரைக்கும்
இந்த வானவில் உன்னுடன் இருக்கும்

மழைத்துளி பனித்துளி கரைந்தபின்னே
அது மறுபடி இரண்டென பிறந்திடுமா  (மழை நின்ற)

கண்ணிமைகள் கைத்தட்டியே
உன்னை மெல்ல அழைகிறதே!
உன் செவியில் விழவில்லையா?
உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே!

உன்னருகில் நானிருந்தும்
உண்மை சொல்ல துனிவு இல்லை
கைகளிலே விரலிருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை

உன்னை எனக்கு பிடிக்கும்
அதை சொல்வதில் தானே தயக்கம்.
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்.

தினம் தினம் கனவினில் வந்துவிடு
நம் திருமண அழைப்பிதழ் தந்துவிடு  (மழை நின்ற)

படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்

திருமண மலர்கள்

பெப்ரவரி 1, 2009 மறுமொழியவும்

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே

பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும்போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு

அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை

இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய்வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில்கைறு கட்டிவிட்டவன்
எவனோதாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசுயிடும் ஓசை கேட்டே -
மனசில் உள்ள பாஷை சொல்வாய்!
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்

தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா?
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே!
தினம் ஒரு கனியே தருவாயா?
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே!

மலர்வாய் மலர்வாய் கொடியே!
கனிவாய் கனிவாய் மரமே!
நதியும் கரையும் அருகே!
நானும் அவனும் அருகே!

பிறந்த இடம் புகுந்த இடம்  வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : வித்யாசாகர்
படம் : பூவெல்லாம் கேட்டு பார்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்

ஜனவரி 27, 2009 மறுமொழியவும்

பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம் (2)

விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே.. அன்பே… நீயே…             (பேரு‌ந்‌தி‌ல் )

பயணத்தில் வருகிற சிறுதூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல்கூச்சம்
பரீட்சைக்குப் படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல்மாலை

புகைப்படம் எடுக்கையில் திணறும் புன்னகை
அன்பே… அன்பே… நீதானே…
அடைமழை நேரத்தில் பருகும் தேநீர்
அன்பே… அன்பே… நீதானே…
ம்.. ம்… ம்… தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீதானே         (பேரு‌ந்‌தி‌ல்…)

தாய்மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

செல்போன் சிணுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்தவர் தருகிற பரிசுப் பொருளும்
அன்பே அன்பே நீதானே
ம்ம்ம் எழுதும் கவிதையில் எழுத்துப் பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீதானே (பேருந்தில்.. )

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டுப் பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆஆஆ பேருந்தில் நீயெனக்கு ஜன்னலோரம்
பின்வாசல் முற்றத்திலே துளசிமாட‌ம்.

படம் :  பொறி
இசை : வித்யாசாகர்

Follow

Get every new post delivered to your Inbox.