தொகுப்பு

Posts Tagged ‘விகடன்’

பத்து படி -2010

அப்பனாகி அரை அங்கிளாகி விட்டதால், குவா குவாவிலும் , குறைவாச குறட்டையிலும் போனது 2009. மாரத்தள்ளி அடுத்த நூலகத்திற்கு ஒரு வருட சந்தா சுவாகா. ஆயிரம் ரூபாய் கிழித்த விகடனக்கும் , ‘on writing well’, ‘the name sake’ அட்டை படத்திற்கும்  ஈடு கட்ட முடியவில்லை. இவ்வருட புது தீர்மானம் புத்தகவாசிப்பையும் சேர்த்தி பெரிய லிஸ்டிட போகிறேன். நன்றி செந்தில்.

அரசூர் வம்சம் - நக்கீரன் பேட்டியில் நாவல் எழுதிய அனுபவத்தை  வாசித்தவுடன பற்றிய தீ, படித்தால் அணையும்.

On writing well – Let me finish it, i owe to William Zenser

ஏதாவது சுஜாதா நாவல் – நைலான் கயிறு , டைனோ இது 2008,2007க்கான வாத்தியார் கோட்டா

வாத்தியார் – ‘எம்.ஜி.ஆர் சொல்லியே திருந்தாதவங்க நீ சொல்லியா திருந்த போறாங்க‘, இந்த வசையாடல் (அப்படித்தாங்கோ) ஆச்ரிய குறியில் தொடங்கி கேள்வி குறியில் தொக்கி நிற்கிறது.

சிறுகதைகள் – வாரமலர், தினக்கதிர், குங்குமம் என்று எங்கு பட்டாலும் சிறுகதைகளை சேர்த்து வைத்திருக்கிறேன், ஒரு ஆய்வுக்காக அல்லது அறிவுக்காக.

Our Culture, What’s Left of It: The Mandarins and the Massesவில்லியம் டேரிம்பிள் புனைப்பெயரில் எழுதியது. தொழில் மனநல மருத்துவர், ஆனாலும் இவர் எழுதும் கட்டுரைகளின் களம் சமூகத்தை பற்றியது.

Chai Chai : எழுத்தாளர் பிஷ்வநாத் கோஷின் தாய் மொழி பெங்காலி என்றாலும் வளர்ந்தது கானபூர்,  வசிப்பது சென்னையில். இவருக்கு பிடித்த மூன்று விஷயங்கள் பெண்கள், பெண்கள்,பெண்கள்.

கொரில்லா :  ஈழம் பற்றிய இலக்கியங்கள், நிகழ்வுகள், செய்திகள் நிரம்ப கிடப்பதால் ஒரு சலிப்பும், ஆர்வமில்லாமையும் தேர்ந்தெடுத்து படிக்க சொல்கிறது.  போர் குறித்த ஒரு ஒற்றை சொல்லை விட்டு நகரும் எந்த படைப்பையும் உற்று நோக்க ஆசை.

Men of Steel : வீர் ஸங்வி , தொலைகாட்சியின் நேச முகம்,  நேர் முகத்தில் crispபாக பேசுவது எழுத்தில் வரும் என்ற நம்பிக்கையில் பட்டியலின் சேர்க்கிறேன்.

உலக சினிமா : ஆ.வி.யில் தொடராக வந்த போது, இதை புத்தகமாக வெளியிடும் போது படித்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

தீபாவளி மலர்

அக்டோபர் 22, 2009 மறுமொழியவும்

இந்த வருடம் எந்தெந்த ‘ தீபாவளி மலர்’ வர இருக்கின்றது என்ற ஆவல் போன வருட ஆ.வி. தீபாவளி குறுக்குகெழுத்து போட்டியோட பையனின் விளையாட்டு பொருளாகி விட்டாலும் இருக்கிறது. புக் கிளப்பில் சேர்ந்ததும் புத்தகம் வாங்கும் பழக்கம் அறவே போனது. ஏன் விகடன் கூட காத்திருந்து படிக்கும் [புரட்டும்] பழக்கம் வந்துவிட்டது.

கல்கி, தினமணி தீபாவளி மலர்கள் சலூன் கடைகளில் கிடைத்தால் புரட்டிவிடுவேன். தீபாவளி மலர்களின் வாசிப்பனுபவம் அதன் படிக்காத பக்கங்களில்தான். வாங்கியவுடன் ஒரு புரட்டி விட்டு, முக்கிய பேட்டிகளை மேய்ந்து விட்டு அக்காடுன்னு வீசிவிடுவேன். மாதங்கள் தாண்டி கணமான புத்தகம் சிக்கும் போது தூக்கி வீச எண்ணம் இல்லாமல், மறுவாசிப்பு நிகழும் போதும் தூசி படிந்த புத்தகங்களில் ஒரு வாசனை ஒட்டி கொள்ளும்.

படித்த பேட்டியை இன்னொறு முறை பார்த்தாலும் , ருதுவான பெண்ணுக்குரிய மரியாதை தரப்படும். அரிய புகைப்படங்கள் , புதிய தகவல்கள் துணுக்கு வாசகனுக்கு ஒரு கிக். சிறுகதைகள் ஏனோ பிடிப்பதில்லை , வாரஇதழ்களில் வந்தாலும் அதேதான். இப்போது இந்த இலக்கிய வடிவம் மீது ஒரு தனி பிரியம்.

இம்முறை அவ்வாறில்லாமல் சில பல மலர்களை ஒவ்வொன்றாக வாங்கும் (அ) படிக்கும் எண்ணம் உள்ளது.

Follow

Get every new post delivered to your Inbox.