தொகுப்பு

Posts Tagged ‘செல்பேசி’

SMS விளம்பரம்

அக்டோபர் 3, 2009 மறுமொழியவும்

இன்று செல்பேசியில் ‘Dear XXXX’ என் பெயரை விளித்து விளம்பர குறுஞ்செய்தி. பார்த்தவுடனே இன்சூரன்ஸ் ஏஜென்ட ஒருவர் சொன்னது நினைவுக்கு வருது. “உங்கள் பி.எப். அமௌன்ட் கூட எங்களுக்கு தெரியும்”.

நமக்கே தெரியாத ஒன்றை ,அதுவும் உங்கள் பைனாஸ் சம்மந்தபட்ட மிக நுண்ணிய செய்தியை, இவர்கள் விரல் நுனியில் வைத்திருப்பது ஆச்சரியமே. புது கிரெடிட் கார்டு வாங்கினாலோ , அல்லது விண்ணப்பிதாலோ போதும் மார்க்கெட்டிங் யுவதி மறு நாள் அழைத்து விடுவார்.

முதல் கேள்வியே நீங்கள் இன்னாரா என்பதே. இல்லை என்றால் பிழைத்தீர்கள் , இல்லாவிடில் அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடத்திற்கு ரெகார்ட் செய்த மெசின் போல, பொல பொலவென கவர்ச்சிகரமான வாசகங்கள் காதில் விழும்.

மாதம் ஐந்து ரூபாய கொடுத்தால் போதும் , ஐந்து லட்சம் வரை ஆக்சிடென்டல் இன்சூரன்ஸ் இலவசம் என்பது முதல் உங்கள் கிரெடிட் கார்டுக்கு annual fees இல்லை என்பது வரை , உங்களை உள்ளிழுக்கும் ஆபார்களுக்கு அளவில்லை.

மீண்டும் விட்ட விசயத்திற்கு வருவோம். இந்த எஸ்.எம்.எஸ். மூலம் விளம்பர பண்ணுவது, targeted audiences நோக்கியது. இன்னார் இதன் மேல் விருப்பம் அல்லது வாங்குவார் என்கிற கணக்கு நடை பெற்ற பின்னர்,அனுப்பட வேண்டிய ஒன்று.

இதை பெரும்பாலும் விளம்பரதாரர்கள் கவனிப்பதில்லை. கிடைக்கும் செல்பேசி நம்பர்களை வைத்து , சரமாரியாக அனுப்பி ஒரு brand aversenessஐ உண்டு பண்ணுகிறார்கள். இதனால் ஏற்பட வேண்டிய brand awareness நெகடிவாக வேலை செய்கிறது. உதாரணம் பி.ஜே .பி. தேர்தல் குறுஞ்செய்தி விளம்பரம்.

Categories: பொது குறிச்சொற்கள்:, ,
Follow

Get every new post delivered to your Inbox.