தொகுப்பு

Posts Tagged ‘செய்தி விமர்சனம்’

வினோத வழக்கு

அக்டோபர் 6, 2009 மறுமொழியவும்

வரதட்சனை கேட்பது தவறு, மனைவியை அடிப்பது தவறு என்றார்கள் ஒத்து கொண்டோம் , தண்டனையும் பெற்றோம். இப்போது வீட்டுக்கு சொல்லாமல் லேட்டாக வந்தால் அதுவும் தவறு தான், இந்தியன் பீனல் கோடு தண்டிக்கும் அளவிற்கு. மும்பை ஹைகோர்ட் இதற்கு சாதகமாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

கணவர் வெகு நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால், போலீஸிடம் புகார் கொடுக்க எண்ணியுள்ளார் ஒரு அன்பு மனைவி. ஆளில்லாத ஊரில் வெகு நேரம் தனியாக இருக்க நேரிட்டதாக புலம்புகிறார் இன்னொருவர். எல்லாம் கணவான்களின் தவறு , தண்டனைக்குரிய தவறு.

அடுத்து எது தவறென்பார்கள், மனைவியை சந்தோஷப்படுத்த வில்லை, கேட்டதை வாங்கிதரவில்லை, திருமதி செல்வம் சேர்ந்து பார்ப்பதில்லை என்றா? வழக்கே வினோதம் என்றால் அதை விட வினோதம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

பெண்களை வளரவிடாமல் தடுப்பது அடிமைத்தனம்தான், அதற்காக எல்லா பிரச்சனைக்கும் கோர்ட் படி தேடுவது தங்கள் responsibilityயை தட்டி கழிப்பதாகும். அடிமைத்தனம் இருக்கட்டும் common sense ஒன்றை பயன்படுத்தினால் பல பிரச்சனைகள் பிரச்சனைகளாவே படாது.

செம்மொழி அந்தஸ்து

அக்டோபர் 1, 2009 மறுமொழியவும்

சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பெற்றதன் விளைவு, தமிழுக்கும் வேண்டும் என்றார் கலைஞர். அதை தொடர்ந்து அண்டை மாநில அரசுகள் தங்கள்  மொழிகளுக்கும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.

மத்திய அரசும் செம்மொழி அந்தஸ்து அளித்து விட்ட நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கறிஞர் காந்தி. கர்நாடக முதல்வர் இது பற்றி கலைஞரிடம் பேசி தீர்க்க எத்தனித்தது மீண்டும் எடியுரப்பாவின் பரந்த மனப்பாண்மையை காட்டுகிறது.

இந்த சங்கிலி அரசியல் விடா கொண்டான் கொடா கொண்டான் கதையாக நீள்வது மாநில உறவுகளுக்கு நல்லதல்ல.தண்ணீர் அரசியலின் தாகம் அடங்காத நிலையில் மொழி அரசியல் சூடு பிடிப்பது நல்லதல்ல . மெட்ராஸ் மாகாணம் களஞ்சிய சொல்லாக ஆகி விட்ட நிலையில் , தமிழக மக்களிடம் கலோனிய மனப்பாண்மை தூசு தட்டும் செயலாக மட்டும் இதை பார்க்க வேண்டும்.

சிலைகள் பரிமாறும் முன்னரே தலைமுறைகள் தாண்டி, திரவியம் தேடுகிறார்கள். யாதும் எம்மொழியே, எதுவும் செம்மொழியே.

Categories: பொது குறிச்சொற்கள்:,
Follow

Get every new post delivered to your Inbox.