செம்மொழி அந்தஸ்து
சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பெற்றதன் விளைவு, தமிழுக்கும் வேண்டும் என்றார் கலைஞர். அதை தொடர்ந்து அண்டை மாநில அரசுகள் தங்கள் மொழிகளுக்கும் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன.
மத்திய அரசும் செம்மொழி அந்தஸ்து அளித்து விட்ட நிலையில், அதை மறுபரிசீலனை செய்ய சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் வழக்கறிஞர் காந்தி. கர்நாடக முதல்வர் இது பற்றி கலைஞரிடம் பேசி தீர்க்க எத்தனித்தது மீண்டும் எடியுரப்பாவின் பரந்த மனப்பாண்மையை காட்டுகிறது.
இந்த சங்கிலி அரசியல் விடா கொண்டான் கொடா கொண்டான் கதையாக நீள்வது மாநில உறவுகளுக்கு நல்லதல்ல.தண்ணீர் அரசியலின் தாகம் அடங்காத நிலையில் மொழி அரசியல் சூடு பிடிப்பது நல்லதல்ல . மெட்ராஸ் மாகாணம் களஞ்சிய சொல்லாக ஆகி விட்ட நிலையில் , தமிழக மக்களிடம் கலோனிய மனப்பாண்மை தூசு தட்டும் செயலாக மட்டும் இதை பார்க்க வேண்டும்.
சிலைகள் பரிமாறும் முன்னரே தலைமுறைகள் தாண்டி, திரவியம் தேடுகிறார்கள். யாதும் எம்மொழியே, எதுவும் செம்மொழியே.