தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு (தென்றல் வந்து)
தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்
தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது (தென்றல் வந்து)
தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே
மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம் (தென்றல் வந்து )
படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு (2)
பாதமலர் நோகுமுன்ன நடக்கும்
பாத வழி பூவிரிச்சேன் மயில (2)
ஓடம்போலாடுதே மனசு
கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ( ஏரிக்கர பூங்காத்தே)
ஓடிச்செல்லும் வான்மேகம் நெலவ
மூடிக்கொள்ளப் பார்க்குதடி மயிலே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி…அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு (ஏரிக்கர பூங்காத்தே)
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே(2)
புதுமையிலே மயங்குகிறேன் (2)
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
சிட்டு போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினந்தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள்
உறவினர் போலே அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போலே இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்
படம் : பிரியா
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
சின்னத் தங்கம் என் செல்லத்தங்கம் ஏன் கண்ணு கலங்குது
இதை எண்ணிக்கொண்டு இந்த அல்லித்தண்டு மனம் விம்மி வருந்துது
நீ துள்ளி வரும்..மானினத்தின் தோழியடி
சிறு துன்பம் என்றால்..எந்தன் நெஞ்சில் காயமடி
குமரி நீயும் குழந்தையடி, மாங்கொழுந்து தானே இதயமடி
பொறந்த பாசம் தவிக்குதடி
உன்னை பார்க்க மனசு துடிக்குதடி
என்ன நடந்ததோ உந்தன் முகம் சிவந்தது
இந்த நினைவிலே சோகம் எங்கும் நிறைந்தது
இந்த அண்ணன் இருக்க உனது வாழ்வில் கலக்கம் ஏனடி (சின்னத் தங்கம்)
மனசுக்கேத்த மாப்பிள்ளையை
உன் மனசு போல மணம் புடிப்பன்
சீமந்தமும் நடத்தி வைப்பன் – உன்
குழந்தைகளை நான் சுமப்பன்
பதினாறுகளும் பெற்று நீ வாழணும் – அதை
பார்த்து தினம் தினம் மகிழணும்
நம்ம ஊரும் உறவும் உனது வாழ்வை மகிழ்ந்து பாடணும் (சின்னத் தங்கம்)
படம் : சேரன் பாண்டியன்
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்
விழியே கதை எழுது கண்ணீரில் எழுதாதே
மஞ்சள் வானம் தென்றல் சாட்சி
உனக்காகவே நான் வாழ்கிறேன்
மனதில் வடித்து வைத்த சிலைகள்- அதில்
மயக்கம் பிறக்க வைத்த கலைகள்
மேகங்கள் போல் நெஞ்சில் ஓடும்
வானத்தை யார் மூடக்கூடும்
உனக்காகவே நான் வாழ்கிறேன் (விழியே)
கோவில் பெண் கொண்டது
தெய்வம் கண் தந்தது
பூஜை யார் செய்வது – இந்தப்
பூவை யார் கொள்வது
ஊமைக்கு வேறேது பாஷை?
உள்ளத்தில் ஏதேதோ ஆசை
உனக்காகவே நான் வாழ்கிறேன் (விழியே)
தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது
காலம் மலர்கின்றது கனவு பலிக்கின்றது
எண்ணத்தில் என்னென்ன தோற்றம் – என்
நெஞ்சத்தில் நீ தந்த மாற்றம்
உனக்காகவே நான் வாழ்கிறேன் (விழியே)
படம் : மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
பாடியவர்கள் : கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசிலா
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
இரவில் நிலவொன்று உண்டு
உறவினில் சுகமொன்று உண்டு
மனைவியின் கனவொன்று உண்டு
எனக்கது புரிந்தது இன்று.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
பொறுத்தம் உடலில் வேண்டும்
புரிந்தவன் துணையாக வேண்டும்
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
கவிஞன் கண்டாலே கவிதை
காண்பவன் கண்டாலே காதல்
அழகினை புரியாத பாவம்
அருகினில் இருந்தென்ன லாபம்.
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம்.
மனது மயங்கி என்ன
உனக்கும் வாழ்வு வரும்.
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்