தொகுப்பு

Posts Tagged ‘கவிஞர் கண்ணதாசன்’

கண்ணா கருமை

பெப்ரவரி 11, 2009 மறுமொழியவும்

கண்ணா கருமை நிறக் கண்ணா
உன்னைக் காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை கண்டு வெறுப்பாரில்லை
என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை

மனம் பார்க்க மறுப்போர்முன் படைத்தாய் கண்ணா
நிறம் பார்த்து வெறுபோர்முன் படைத்தாய் கண்ணா
இனம் பார்த்து என்னைச்சேர்க்க மறந்தாய் கண்ணா
இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (கண்ணா கருமை)

பொன்னான மனமொன்று தந்தாய் கண்ணா
அதில் பூப்போன்ற நினைவொன்றை வைத்தாய் கண்ணா
கண்பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா
எந்தக்கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா (கண்ணா கருமை)

படம் : நானும் ஒரு பெண்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்

உனக்கென்ன மேலே

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
உனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா
உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா
தாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்
ததொம் ததொம்  ததொம் ததொம்
நடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கல்ந்தோம்
ததொம் ததொம்  ததொம் ததொம்

ஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)
சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை
கால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)
உன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா

யார் யாரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)
பூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று
பால் போல கள்ளும் வெள்ளை நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)
நான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா  (உனக்கென்ன மேலே )

படம் : சிம்லா ஸ்பெஷல்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடல் : கவிஞர் கண்ணதாசன்

முத்துக்களோ கண்கள்

ஜனவரி 29, 2009 மறுமொழியவும்

முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

படித்த பாடம் என்ன உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊரிய ஜாதிப் பூவை சூடத் துடிப்பதென்ன

முத்துக்களே பெண்கள் தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேலையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை

கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடிவந்து காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன என் எண்ணம் ஏங்கும் ஏக்கம் என்ன
விருந்து கேட்பதென்ன அதையும் விரைந்து கேட்பதென்ன  (முத்துக்களோ)

ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம் பின்னிப் பார்ப்பதென்ன
அருகில் நடந்து மடியில் விழுந்து ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன உன் கைகள் மாலை ஆவதென்ன
வாழைத் தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன  (முத்துக்களே)

படம் : ஊட்டி வரை உறவு
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : டி.எம்.எஸ்., பீ.சுசிலா

பூங்காற்று புதிரானது

ஜனவரி 24, 2009 மறுமொழியவும்

பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது

வருகின்ற காற்றும்  சிறு பிள்ளையாகும்
மரகத  கிள்ளை மொழி பேசும்      (2)

பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்

பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது

நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி

என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ

பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புது வாழ்வு சதிராடுது

இசை : இளையராஜா
படம் மூன்றாம் பிறை
பாடலாசிரியர் : கவிஞர் கண்ணதாசன்

Follow

Get every new post delivered to your Inbox.