தொகுப்பு

Posts Tagged ‘ஏ.ஆர்.ரஹ்மான்’

என் வீட்டு தோட்டத்தில்

பெப்ரவரி 4, 2009 மறுமொழியவும்

என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே                   (என் வீட்டு)

வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய்பூட்டு சத்தமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது

ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிபூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ

உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே                   (உன் வீட்டு)

சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது

எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம் அனுபவமோ         (என் வீட்டு,உன் வீட்டு)

பாடல் : கவிஞர் வைரமுத்து
படம் : ஜென்டில்மேன்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ

ஜனவரி 26, 2009 மறுமொழியவும்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ  (பெண்ணல்ல)

சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாளம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் சென்பகப்பூ  (பெண்ணல்ல)

தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி (பெண்ணல்ல)

சித்திரை மாத நிலவொளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித்துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தைப் போல இருப்பவள்
வெல்லப் பாகைப் போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்ல திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூமுடித்து
உலவும் அழகு பூந்தோட்டம்
மெத்தையில் நானும் சீராட்ட பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ

படம் : உழவன்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்

புத்தம் புது பூமி வேண்டும்

ஜனவரி 25, 2009 மறுமொழியவும்

புத்தம் புது பூமி வேண்டும்
நித்தம் ஒரு வானம் வேண்டும்
தங்க மழை பெய்ய வேண்டும்
தமிழில் குயில் பாட வேண்டும்

சொந்த ஆகாயம் வேண்டும்
ஜோடி நிலவொன்று வேண்டும்
நெற்றி வேர்க்கின்ற போது
அந்த நிலவில் மழை பெய்ய வேண்டும்

வண்ண விண்மீன்கள் வேண்டும்
மலர்கள் வாய் பேச வேண்டும்
வண்டு உட்காரும் பூ மேலே
நான் வந்து உட்காரும் வரம் வேண்டும்

கடவுளே கொஞ்சம் வழி விடு
உன் அருகிலே ஓர் இடம் கொடு
புன்னகை எங்கள் தாய்மொழி என்ற வரம் கொடு
பூமியில் சில மாறுதல் தனை வர விடு (புத்தம் புது)

யுத்தம் இல்லாத பூமி
ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்
மரணம் காணாத மனித இனம்
இந்த மண்ணில் நிலை கொள்ளும் வரம் வேண்டும்

பஞ்சம் பசி போக்க வேண்டும்
பாலைவனம் பூக்க வேண்டும்
சாந்தி சாந்தி என்ற சங்கீதம்
சுகம் ஏந்தி ஏந்தி வந்து விழ வேண்டும்

போனவை அட போகட்டும்
வந்தவை இனி வாழட்டும்
தேசத்தின் எல்லை கோடுகள் அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணிலே வந்து வாழட்டும் (புத்தம் புது)

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
படம் : திருடா திருடா

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

ஜனவரி 24, 2009 மறுமொழியவும்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது
பனியும் படர்ந்தது கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது

நான்கு கண்ணாடி சுவர்களுக்குளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ தனிமை தனிமையோ கொடுமை கொடுமையே

பேச்செல்லாம் தாலாட்டுப் போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவும் ஒரு முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை அவள் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம் தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதே
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா
சில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கோடை ஆனதேனோ
வா அன்பே நீயும் வந்தால் செந்தணல் கூட பனிகட்டி போல மாறும் அன்பே

பாடல் : கவிஞர் வாலி
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
படம் : சில்லுன்னு ஒரு காதல்

மின்னலே நீ வந்ததேனடி

ஜனவரி 24, 2009 மறுமொழியவும்

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயமேனடி
என் வானிலே நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

கண் விழித்து பார்த்த போது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே
இங்கு சிதறிபோன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பால்மழைக்கு காத்திருக்கும் பூமி இல்லையா
ஒரு பண்டிகைக்கு காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வர காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்து காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

மின்னலே என் வானம் உன்னை தேடுதே…

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
படம் : மே மாதம்

Follow

Get every new post delivered to your Inbox.