என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
என் வீட்டு தென்னங்கீற்றை இப்போதே கேட்டுபார்
என் நெஞ்சை சொல்லுமே (என் வீட்டு)
வாய்பாட்டு பாடும் பெண்ணே மெளனங்கள் கூடாது
வாய்பூட்டு சத்தமெல்லாம் பெண்ணுக்கு ஆகாது
வண்டெல்லாம் சத்தம் போட்டால் பூஞ்சோலை தாங்காது
மொட்டுக்கள் சத்தம் போட்டால் வண்டுக்கு கேக்காது
ஆடிக்கு பின்னாலே காவேரி தாங்காது
ஆளான பின்னாலே அல்லிபூ மூடாது
ஆசை துடிக்கின்றதோ
உன் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
உன் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்
உன் வீட்டு தென்னங்கீற்றை ஒவ்வொன்றாய் கேட்டுபார்
என் பேர் சொல்லுமே (உன் வீட்டு)
சொல்லுக்கும் தெரியாம சொல்லத்தான் வந்தேனே
சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே
சொல்லுக்கும் அர்த்ததுக்கும் தூரங்கள் கிடையாது
சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது
எண்ணிக்கை தீர்ந்தாலும் முத்தங்கள் தீராது
எண்ணிக்கை பார்த்தாலே முத்தங்கள் ஆகாது
ம்ம்ம் அனுபவமோ (என் வீட்டு,உன் வீட்டு)
பாடல் : கவிஞர் வைரமுத்து
படம் : ஜென்டில்மேன்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம், சுஜாதா
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே (விழியிலே )
உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன்விளக்கே தீபமே (விழியிலே )
ஓவியனும் வரைந்ததில்லையே உனைப் போல்
ஓரழகை கண்டதில்லையே (2)
காவியத்தின் நாயகி கற்பனையின் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கோடி (விழியிலே )
கையளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோமினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே (விழியிலே )
பாடல் : பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
வானம் விட்டு வாராயோ
விண்ணிலே பாதையில்லை
உன்னைத்தொட ஏணியில்லை (வண்ணம்)
பக்கத்தில் நீயுமில்லை
பார்வையில் ஈரமில்லை
சொந்தத்தில் பாஷையில்லை
சுவாசிக்க ஆசையில்லை
கண்டுவந்து சொல்வதற்கு
காற்றுக்கு ஞானமில்லை
நீலத்தைப் பிரித்துவிட்டால்
வானத்தில் ஏதுமில்லை
தள்ளித்தள்ளி நீயிருந்தால்
சொல்லிக்கொள்ள யாருமில்லை (வண்ணம்)
நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்சத்திரப் பூப்பறித்தேன்
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி
கண்ணிரண்டில் பார்த்திருப்பேன்
கால்கடுக்கக் காத்திருப்பேன்
ஜீவன்வந்து சேரும்வரை
தேகம்போல் நான் கிடப்பேன்
தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன் (வண்ணம்)
படம் : சிகரம்
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இசை : எஸ் பி பாலசுப்ரமணியம்
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் (2)
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு இங்கே
உலகமே ஆடும் தன்னாலே (பாட்டு தலைவன்)
காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே (பாட்டு தலைவன்)
பாரிஜாதம் பாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காதலின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான்தானே தாலாட்டும் நிலவு (பாட்டு தலைவன்)
படம் : இதயம் ஒரு கோவில்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி