Posts Tagged ‘எஸ். ஜானகி’
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ எனக்கது போதும்
எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )
மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்
உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )
படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
Categories: இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, திரையிசை பாடல்கள்
குறிச்சொற்கள்:இளையராஜா, எம்.எஸ்.விஸ்வநாதன், எஸ். ஜானகி, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், திரைப்பட பாடல்கள், பாடல்கள், மெல்ல திறந்தது கதவு
பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான்
கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் (2)
சோர்ந்த போது சேர்த்த சுருதி
சொர்க்கலோகம் காட்டு இங்கே
உலகமே ஆடும் தன்னாலே (பாட்டு தலைவன்)
காதல் பேசும் தாழம்பூவே
ஓவியம் ஆனதே கைகள் மீது
கைகள் வண்ணம் தீட்டும் நேரம்
ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம்
பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே
காதலே வாழ்கவே ஆயிரம் காலமே
நீதானே தாலாட்டும் நிலவே (பாட்டு தலைவன்)
பாரிஜாதம் பாயும் போதும்
பால்நிலா வானிலே காதல் பேசும்
கூரை தூக்கம் ஆளும் போது
பார்வைகள் பேசுதே பாவையோடு
காதலின் தேரிலே ஊர்வலம் போகலாம்
ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம்
நான்தானே தாலாட்டும் நிலவு (பாட்டு தலைவன்)
படம் : இதயம் ஒரு கோவில்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி