Heya fawda – எகிப்திய திரைப்படம்

ஸ்டார் மூவிஸ், ஹெச்.பி.ஒ. தாண்டாத ரிமோட் NDTV Lumiereரில் நின்றது ஒரு அழகான யுவதியைக்கண்டு. படத்தின் கதாநாயகனும் அப்படி தான்.
ஊரே நடுங்கும் போலீஸ் ஆபிஸர். சட்டத்தை கையில் எடுத்து கொண்டு கொட்டம் அடிக்கும் அவனுக்கும் ஆசை வந்தது . அவளுக்கோ மேயர் மேல். வேண்டாம் வேண்டாம் என்றாலும் நாயகியை துரத்த , அவளோ அவனமானப்படுத்த , அவமானம் துடைக்க கடத்திகொண்டு கற்பழிக்கிறான்.
நிற்க. இது வரை எகிப்து மக்கள் நாகரிகம், பழக்க வழக்கம் , உடை , ரசனை பற்றி நூறு புத்தகம் படித்தாலும் வராத அறிவு சினிமா மூலம் கிடைத்து விடுகிறது. அது உண்மையோ பொய்யோ, நமக்குள் ஒரு ஜன்னலை திறந்துவிடுகிறது.
இந்த திரைப்படமும் அப்படி தான். இதற்கு முன் எகிப்து பற்றி இம்மையளவும் தெரியாது. மிஞ்சிபோனால் நைல் நதி, பிரமிட் அவ்வளவே. சினிமா என்னும் மொழியின் பலமும் பலவீனம் இதுதான். ஒரு கற்பனை உலகில் உங்களை சஞ்சரிக்க விட்டு , புதுப்புது வாசல்களை திறந்து விடும்.
மீதி கதைக்கு வருவோம். நாயகியின் நிலை கண்டு அவள் அம்மா துடிக்கிறாள். மேயரின் துணை கொண்டு ஆபிஸரை பழி வாங்க கமிஸ்னர் ஆபிஸ் முன் ஊரை கூட்டுகிறாள். பழி தீர்க்க நாள் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் புகார்களை அடுக்க , சிறைக்குள் பொய் வழக்குகளால் அடைக்கப்பட்டிருக்கும் வாலிபர்களை விடுவிக்க கோரிக்கை எழுகிறது.
சிறையில் ஒளிந்திருக்கும் ஆபிஸர் கண்டுபிடிக்கப்படுகிறார், வலிய வெளி வரவழைப்பட , தன் முடிவை தானே தேடிக்கொள்கிறார். “நூரிடம் என் மன்னிப்பை சொல், ஏனென்றால் நாளை , அவளை பார்க்க நான் இருக்க மாட்டேன் ” , என்றவாறு மடிகிறார்.
பதிவு பஞ்ச் : உலக சினிமா நாமளும் பாத்தாச்சுல்ல.
counter பஞ்ச் : விமர்சனம் என்ற போர்வையில் பதிவு போட்டாசுல்ல.