பத்து படி -2010
அப்பனாகி அரை அங்கிளாகி விட்டதால், குவா குவாவிலும் , குறைவாச குறட்டையிலும் போனது 2009. மாரத்தள்ளி அடுத்த நூலகத்திற்கு ஒரு வருட சந்தா சுவாகா. ஆயிரம் ரூபாய் கிழித்த விகடனக்கும் , ‘on writing well’, ‘the name sake’ அட்டை படத்திற்கும் ஈடு கட்ட முடியவில்லை. இவ்வருட புது தீர்மானம் புத்தகவாசிப்பையும் சேர்த்தி பெரிய லிஸ்டிட போகிறேன். நன்றி செந்தில்.
அரசூர் வம்சம் - நக்கீரன் பேட்டியில் நாவல் எழுதிய அனுபவத்தை வாசித்தவுடன பற்றிய தீ, படித்தால் அணையும்.
On writing well – Let me finish it, i owe to William Zenser
ஏதாவது சுஜாதா நாவல் – நைலான் கயிறு , டைனோ இது 2008,2007க்கான வாத்தியார் கோட்டா
வாத்தியார் – ‘எம்.ஜி.ஆர் சொல்லியே திருந்தாதவங்க நீ சொல்லியா திருந்த போறாங்க‘, இந்த வசையாடல் (அப்படித்தாங்கோ) ஆச்ரிய குறியில் தொடங்கி கேள்வி குறியில் தொக்கி நிற்கிறது.
சிறுகதைகள் – வாரமலர், தினக்கதிர், குங்குமம் என்று எங்கு பட்டாலும் சிறுகதைகளை சேர்த்து வைத்திருக்கிறேன், ஒரு ஆய்வுக்காக அல்லது அறிவுக்காக.
Our Culture, What’s Left of It: The Mandarins and the Masses – வில்லியம் டேரிம்பிள் புனைப்பெயரில் எழுதியது. தொழில் மனநல மருத்துவர், ஆனாலும் இவர் எழுதும் கட்டுரைகளின் களம் சமூகத்தை பற்றியது.
Chai Chai : எழுத்தாளர் பிஷ்வநாத் கோஷின் தாய் மொழி பெங்காலி என்றாலும் வளர்ந்தது கானபூர், வசிப்பது சென்னையில். இவருக்கு பிடித்த மூன்று விஷயங்கள் பெண்கள், பெண்கள்,பெண்கள்.
கொரில்லா : ஈழம் பற்றிய இலக்கியங்கள், நிகழ்வுகள், செய்திகள் நிரம்ப கிடப்பதால் ஒரு சலிப்பும், ஆர்வமில்லாமையும் தேர்ந்தெடுத்து படிக்க சொல்கிறது. போர் குறித்த ஒரு ஒற்றை சொல்லை விட்டு நகரும் எந்த படைப்பையும் உற்று நோக்க ஆசை.
Men of Steel : வீர் ஸங்வி , தொலைகாட்சியின் நேச முகம், நேர் முகத்தில் crispபாக பேசுவது எழுத்தில் வரும் என்ற நம்பிக்கையில் பட்டியலின் சேர்க்கிறேன்.
உலக சினிமா : ஆ.வி.யில் தொடராக வந்த போது, இதை புத்தகமாக வெளியிடும் போது படித்து கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

IMDB டாப் லிஸ்டில் உள்ள பத்து படங்களையாவது பார்த்து விட வேண்டும் என்கிற வைராக்கியத்தில் , ‘one flew over cuckoo’s nest’ ட்வுன்லோட் செய்தேன். நிறைய ஹைப்பிற்கு காரணம் , பதிவர்களிடத்தில் பேசப்படும் ஒரு படமாக இருந்ததே. ஸப்டைட்டிலுடன் பார்ப்பது தன்னை குறைவாக மதிப்பிடுவதற்கில்லை, மாறாக ஒரு சரியான புரிதல் வேண்டியே.