தொகுப்பு

Posts Tagged ‘இளையராஜா’

வானம் கீழே

பெப்ரவரி 11, 2009 மறுமொழியவும்

வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வாவா இதில்
முதலும் முடிவும் என்ன (வானம் கீழே )

இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் (2)
தினமும் மனமும் குதிரையில் பறக்கும்
ஊஞ்சல் போலே என்னுள்ளம் ஆடும்

மேலும் மேலும் வேகம் கூட
மேலும் மேலும் மேகம் கூட
நானும் இங்கே காணும் இன்பம்
இரவும் நிழலும் கடலோ கனவோ (வானம் கீழே )

பறவை மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது இல்லை
கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை

நானும் கூட பறவை ஜாதி (2)
பழகிப்பார்த்தால் தெரியுது சேதி
தினமும் மனம் போல் திரியும் குருவி (வானம் கீழே )

இசை : இளையராஜா

படம் : தூங்காதே தம்பி தூங்காதே

விழியிலே மலர்ந்தது

பெப்ரவரி 2, 2009 மறுமொழியவும்

விழியிலே மலர்ந்தது உயிரிலே கலந்தது
பெண்ணென்னும் பொன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே
அடடா எங்கெங்கும் உன்னழகே     (விழியிலே )

உன் நினைவே போதுமடி
மனம் மயங்கும் மெய் மறக்கும்
புது உலகின் வழி தெரியும்
பொன்விளக்கே தீபமே         (விழியிலே )

ஓவியனும் வரைந்ததில்லையே உனைப் போல்
ஓரழகை கண்டதில்லையே (2)
காவியத்தின் நாயகி கற்பனையின் ஊர்வசி
கண்களுக்கு விளைந்த மாங்கனி
காதலுக்கு வளர்ந்த பூங்கோடி    (விழியிலே )

கையளவு பழுத்த மாதுளை
பாலில் நெய்யளவு பரந்த புன்னகை
முன்னழகில் காமினி
பின்னழகில் மோமினி
மோக மழை தூவும் மேகமே
யோகம் வர பாடும் ராகமே     (விழியிலே )

பாடல் : பஞ்சு அருணாசலம்
இசை: இளையராஜா
படம்: புவனா ஒரு கேள்விக்குறி
பாடியவர்: எஸ் பி பாலசுப்ரமணியம்

மடை திறந்து

பெப்ரவரி 1, 2009 மறுமொழியவும்

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் குயில் நான்
இசை கலைஞன் என்னாசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது

காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞாலம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே (2)
விரலிலும் குரலிலும் சுவரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்
(மடை திறந்து தாவும்)

நேற்று என் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் (2)
இசைகென்ற இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்
(மடை திறந்து தாவும்)

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை  : இளையராஜா
படம்   : நிழல்கள்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

ஜனவரி 31, 2009 மறுமொழியவும்

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதியில்ல
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்ல

இது நாடா இல்ல வெறும் காடா
இதை கேட்க யாரும் இல்லை தோழா   (2 )

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்து கொடுத்தது
ஊருக்கு பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றி தவிக்குது

எத்தனை காலம் இப்படி போகும்
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்
என்றிங்கு மாறும் வேளை வரும்

ஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

ஆத்துக்கு பாதை இங்கு யாரு தந்தது
தானாக பாதை  கண்டு நடக்குது
காற்றுக்கு பாட்டு சொல்லி யாரு தந்தது
தானாக பாட்டு ஒண்ணு படிக்குது

எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குளே
காலையில் தோன்றும் சூரியன் போலே
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே

சேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா
கங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா

புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இங்கே இன்று மாறவில்ல
எங்க பாரத்தில் சோத்து சண்டை தீரவில்ல

படம்           :  உன்னால் முடியும் தம்பி
இசை          :  இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

வா வெண்ணிலா

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
வா வெண்ணிலா உன்னை தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன்
மேலாடை மூடியே  ஊர்கோலமாய் போவதேன்

முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும்
திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம்
ஒரு முறையேனும் ஆ ஆ திருமுகம் காணும்
வரம் தர வேண்டும் ஆ ஆ  எனக்கது போதும்

எனைச்சேர எதிர்பார்த்து உன்னை ஏழு ஜென்மம் ஏங்கினேன் (வா வெண்ணிலா )

மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது
நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும்
இடையினில் ஆடும் உடையென நானும்
இணை பிரியாமல் துணை வர வேண்டும்

உனக்காக பனிக்காற்றை தினம் தூது போக வேண்டினேன் (வா வெண்ணிலா )

படம் : மெல்ல திறந்தது கதவு
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன் , இளையராஜா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி

தென்றல் வந்து என்னைத் தொடும்

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆகா சத்தமின்றி முத்தமிடும்
பகலே போய்விடு
இரவே பாய் கொடு
நிலவே பன்னீரைத் தூவி ஓய்வெடு  (தென்றல் வந்து)

தூரல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

தெரிந்த பிறகு திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு
மார்பில் சாயும் போது       (தென்றல் வந்து)

தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
மோகம் வந்து என் மார்பில்
வீழ்ந்ததேனோ கண்ணே

மலர்ந்த கொடியோ மயங்கிக் கிடக்கும்
இதழின் ரசங்கள் எனக்குப் பிடிக்கும்
சாரம் ஊறும் நேரம்        (தென்றல் வந்து )

படம்: தென்றலே என்னைத் தொடு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

எனக்கு பிடித்த பாடல்

ஜனவரி 30, 2009 மறுமொழியவும்

எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவு அது உன்னை பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக்கூட்டுமே
உதிர்வது பூக்களா மனது வளர்த்த சோலையில்
காதல் பூக்கள் உதிருமா

(எனக்கு பிடித்த )

மெல்ல நெருங்கிடும் போது நீ தூரப் போகிறாய்
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்

(எனக்கு பிடித்த)

வெள்ளிக்கம்பிகளைப்போலே ஒரு தூறல்போடுதோ
விண்ணும் மண்ணில் வந்துசேர அது பாலம்போடுதோ
நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் மறவியாய் அன்பிலே நனைக்கிறாய்
வேதம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்

(எனக்கு பிடித்த)

படம்            : ஜுலி கணபதி
பாடியவர் : ஷ்ரேயா
இசை         : இளையராஜா

ஏரிக்கர பூங்காத்தே

ஜனவரி 28, 2009 மறுமொழியவும்

ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு (2)

பாதமலர் நோகுமுன்ன நடக்கும்
பாத வழி பூவிரிச்சேன் மயில (2)
ஓடம்போலாடுதே மனசு
கூடித்தான் போனதே வயசு
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது ( ஏரிக்கர பூங்காத்தே)

ஓடிச்செல்லும் வான்மேகம் நெலவ
மூடிக்கொள்ளப் பார்க்குதடி மயிலே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி…அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா

நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு (ஏரிக்கர பூங்காத்தே)

இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

அக்கறை சீமை

ஜனவரி 27, 2009 மறுமொழியவும்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே(2)
புதுமையிலே மயங்குகிறேன் (2)
அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

பார்க்க பார்க்க ஆனந்தம் பறவை போல உல்லாசம்
வேலையின்றி யாரும் இல்லை எங்கும் சந்தோஷம்
வெறும் பேச்சு வெட்டி கூட்டம் ஏதும் இல்லை இந்த ஊரில்
கள்ளம் கபடம் வஞ்சகம் இன்றி
கண்ணியமாக ஒற்றுமை உணர்வுடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

சிட்டு போல பிள்ளைகள் தேனில் ஆடும் முல்லைகள்
துள்ளி துள்ளி மான்கள் போல ஆடும் உற்சாகம்
தினந்தோறும் திருநாளே சுகம் கோடி மனம் போலே
சீனர் தமிழர் மலேய மக்கள்
உறவினர் போலே அன்புடன் நட்புடன் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே

மஞ்சள் மேனி பாவைகள் தங்கம் மின்னும் அங்கங்கள்
காவியத்தில் வார்த்தை இல்லை உம்மை பாராட்ட
நடை பார்த்து மயில் ஆடும் மொழி கேட்டு கிளி பேசும்
கண்ணில் தவழும் புன்னகை கண்டேன்
சொர்க்கம் போலே இன்பமும் பெருமையும் வாழும் சிங்கப்பூர்

அக்கறை சீமை அழகினில் மனம் ஆட கண்டேனே
புதுமையிலே மயங்குகிறேன்

படம் : பிரியா
இசை : இளையராஜா
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ்

இளைய நிலா பொழிகிறதே

ஜனவரி 26, 2009 மறுமொழியவும்

இளைய நிலா பொழிகிறதே
இதயம் வரை நனைகிறதே
உலாப் போகும் மேகம்
கனாக் காணுமே விழாக் காணுமே வானமே

வரும் வழியில் பனி மழையில்
பருவ நிலா தினம் நனையும்
முகிலெடுத்து முகம் துடைத்து
விடியும் வரை நடை பழகும் (2)

வான வீதியில் மேக ஊர்வலம்
காணும் போதிலே ஆறுதல் தரும்
பருவ மகள் விழிகளிலே கனவு வரும் (இளைய நிலா)

முகிலினங்கள் அலைகிறதே
முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால்
அழுதிடுமோ அது மழையோ (2)

நீல வானிலே வெள்ளி ஓடைகள்
போடுகின்றதே என்ன ஜாடைகள்
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்

பாடல் : கவிஞர் வைரமுத்து
இசை  : இளையராஜா

Follow

Get every new post delivered to your Inbox.