வானம் கீழே
பெப்ரவரி 11, 2009
மறுமொழியவும்
வானம் கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே போனால என்ன
மாயம் எல்லாம் மாயம்
இதில் மனிதன் நிலை என்ன
வாடா ராஜா வாவா இதில்
முதலும் முடிவும் என்ன (வானம் கீழே )
இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் (2)
தினமும் மனமும் குதிரையில் பறக்கும்
ஊஞ்சல் போலே என்னுள்ளம் ஆடும்
மேலும் மேலும் வேகம் கூட
மேலும் மேலும் மேகம் கூட
நானும் இங்கே காணும் இன்பம்
இரவும் நிழலும் கடலோ கனவோ (வானம் கீழே )
பறவை மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது இல்லை
கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை
நானும் கூட பறவை ஜாதி (2)
பழகிப்பார்த்தால் தெரியுது சேதி
தினமும் மனம் போல் திரியும் குருவி (வானம் கீழே )
இசை : இளையராஜா
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
Categories: இளையராஜா, தூங்காதே தம்பி தூங்காதே
இளையராஜா, தூங்காதே தம்பி தூங்காதே