யார் வீட்டில்
யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ
கார் கால காட்டில் ஏன் வாடுதோ
மேகம் தன்னில் மேகம் மோதி
மின்னல் மின்னுதோ
மின்னல் இந்த நேரம் எந்தன்
கண்ணில் மின்னுதோ
ஒரு ராகம் புது ராகம்
அதில் சோகம் தான் ஏனோ (யார் வீட்டில்)
ராகங்கள் நூறு அவள் கொடுப்பாள்
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்
ஜீவன் அங்கே என்னை தேடும்
பாடல் இங்கே காற்றில் ஓடும்
காணாமல் கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஓர் ஏழை வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா வீதியில்
பூங்காற்று போல் ஆடவே
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே (யார் வீட்டில்)
வான் மேகம் மோதும் மழை தனிலே
நான் பாடும் பாடல் நனைகிறதே
பாடல் இங்கே நனைவதனாலே
நனையும் வார்த்தை கரையுது இங்கே
ஜென்மங்கள் யாவும் நீ வாழவே
காதல் கொண்ட உள்ளம்
காணும் அன்பின் இல்லம்
ஒர் காற்றின் கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையை தாண்டுமோ
நியாங்கள் வாய் மூடுமோ
தெய்வம் இல்லை என்று போகுமோ (யார் வீட்டில் )
படம் : இதயம் ஒரு கோவில்
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்