பழைய குப்பை
புவியிலோரிடம்
இலக்கில்லா இலக்கியம்
தினப்பத்திரிக்கையின் கால அவகாசம் மனைவி காபி டம்ப்ளரை அலசும் வரை தான். வார பத்திரிக்கை, ‘மீண்டும் பேசலாம்’ போடும் வரை தான். வாராந்திரியாகட்டும், தினசரியாகட்டும் அதன் வாசனை சிறு பெட்டகத்துள் அடைத்த ஜவ்வாது போல ,திறந்ததும் அதன் திசைக்கு ஒத்த வாசகனை தேடி நீர்த்து விடுவதற்காக எழுதியது போன்றே இருக்கும்.
பெரும்பான்மை கவிதை, கட்டுரை, கதை என்ற கட்டமைப்பில் ஒத்தே, குறுக்கிய ஓடை போல் அதன் வட்டத்துள் சிக்கும் அந்த நொடிக்கான ரசனையை மட்டுமே தாங்கி கொண்டு, ஒரு புன்னகை, வருத்தம் , சோகம் , அதிருணர்வு தாண்டிய ஆழ்ந்த சலசப்பை தராமலே,அங்கும் இங்குமாக பக்கம் தாவிச்சொல்லும் இலக்கில்லா இலக்கியம் போர்னோவை ஒத்தது
பேருந்து நிலையங்கள்
பொது சொத்தாம் குப்பை தொட்டியாம்
வந்தவர் சொந்தமில்லை
சென்றவர் நொந்ததும் இல்லை.
இதில் வரவு நீ , உறவு ஏன்
எனில் பொதுஉடைமை எது? கடமை உனது
வலிந்திட துணிந்து செய்வீர்
நற்பண்பு எது சுத்தம் காண்பீர்
வீடில்லை இது ஆம்
அதில் நாமில்லை தான்
நாடில்லை இது
நாதியில்லை விடு
கிழவிஸ் டைம்ஸ்
கண்டேன் கோடம்பாக்கம்
சமீபத்தில் இரண்டு படங்களை பார்க்க நேரிட்டது. பயம் வேண்டாம். இது விபத்தல்ல. ரீலிஸான முதல் வாரத்திலே தியேட்டர் சென்று படம் பார்க்க பொருளாதார வசதியும் , அது இருந்தாலும் முண்டியடித்து இரண்டு வாரத்திற்கு மட்டும் ஓடும் படங்களை பார்த்து திட்ட ரசனை குறைவும், பெண்களுரூவில் இல்லை.
கந்தசாமி பார்த்து விட்டு, கண் வலி வந்தது தான் மிச்சம். fast editing என்ற பேரில், ஒரு விநாடிக்கு 1000 frameகளை சரக் சரகென்று வெட்டி ஒட்டி தள்ளியிருக்கிறார் எடிட்டர் ஆஆஆசாமி. ஸ்ரேயாவின் குறிக்கோள் ஒன்றேதான். FTV ரேம்ப் வாக் மாடல்களின் அத்தனை சோதனை முயற்சிகளும், வெறித்தனமாக கையாளப்பட்டுள்ளது.
கமர்சியல் படங்களின் வெற்றியை ஏளனப்படுத்தாமல், மக்களின் கலை உணர்வையும் திட்டாமல் விமர்சனம் எழுத முடியாது. இருந்தாலும், வெற்றி பணத்தில், லோ பட்ஜெட் புது முயற்சிகளில் சுசி கணேசன் ஈடுபடலாம். அதற்காக கிராம்,ஏலக்காய், பட்டையை தத்தெடுத்து மசாலா படத்திற்கு,முலாம் பூச வேண்டாம்.
தமிழ்ப்படம், நிறைய எதிர்ப்பார்த்தால, கொஞ்சம் ஏமாற்றம்தான். திரைக்கதை தொய்வடையும் நேரத்தில் , நான்கைந்து spoofகளை சேர்த்திருந்தால், full meals சாப்பிட திருப்தி ஏற்பட்டிருக்கும். சிவாவும், behind the camera டீமும் , அமுதனுக்கு பக்கபலம். அடுத்து இதே genreலில் படமெடுக்க ஆசைப்பட்டால், வெங்கட் பிரபுவையும், சிம்பு தேவனையும் ஓரங்கட்டலாம்.
Optimizing lunch hours
Picture this. Its 12 noon, your stomach is aching for a lunch. There pops a mail from your manager for a meeting alert at 12.30. Can you ask your enzymes to delay juicing digestive hormones? No, but you can quickly join for Status update meeting right there which was promised for one hour and (Un)expectedly extends for 1800 seconds. Even the seconds can kill you when hormones for appetizers is crunching your intestine. Feedback were suggested, Can we do lunch hours in batch fashion? Group may be splitted into 3 with 2 members each will occupy cafeteria for 1/2 slot beginning 12.30.
Credibility
Credibility is defined as the ability to convince your manager , you are not wasting time , rather working towards completing the task and in the path if faced with any dependencies, you report it to him. This way not only your skills,but visibility will never be a disability in your career.
முன் தீர்மானங்களுடன் இயங்கும் சமூகம்
முன் தீர்மானங்களுடனே இயங்குகிறது சமூகம். அதன் பார்வை இரண்டாம் திருப்புதலுக்கோ, மூன்றாம் நோக்கலுக்கா காத்திருப்பதில்லை. அவரச யுகத்தில் அவரவர் நியாயங்கள், எதிராளியின் மூச்சு காற்றில் முகத்தில் படும் முன்னரே அளக்கப்படுகின்றன.